நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான 'இந்தியா கூட்டணி' போட்டியிட்ட 39 தொகுதியிலும் அமோக வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் சுயேச்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
திருமாவளவன் தலைமையிலான வி.சி.க 1999ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் பயணித்து வரும் நிலையில், 2009 மக்களவைத் தேர்தலில் நட்சத்திரம் சின்னத்திலும், 2014 மக்களவைத் தேர்தலில் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வி.சி.க சார்பில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்றார்.
இதேபோல், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வி.சி.க 6 இடங்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வி.சி.க-வுக்கு பானை சின்னத்தை பொது சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. அதன்பிறகான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.
2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் #சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற களப்பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் #நன்றி தெரிவிக்கும் விழா இன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி ஆகிய இடங்களில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன்… pic.twitter.com/WaQmo9iiXc
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 13, 2024
திருமா நெகிழ்ச்சி
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பானை சின்னம் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், அதனை தேர்வு செய்தவர் யார்? என்பது குறித்தும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், “2019 மக்களவைத் தேர்தலில் நான் எந்த சின்னத்தில் நிற்பது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். மேஜை உள்ளிட்ட சின்னங்களை தேர்வு செய்வதற்காக காட்டிக்கொண்டு இருந்தேன். நான் பானை சின்னத்தைக் காட்டவில்லை.
அருகில் இருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இது என்ன சின்னம் என்று கேட்டார். பானை சின்னம் என்று சொன்னேன். இந்த சின்னம் தான் உங்களுக்கு சரியாக இருக்கும், அதனை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார். ஆதலால், வி.சி.க-வின் சின்னம் கண்ட தலைவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன் என்றால், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை" என்று கூறி நெகிழ்ந்தார்.
2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற களப்பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி ஆகிய இடங்களில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன்… pic.twitter.com/aqkHO3lrQp
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 13, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.