தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் செண்பகவல்லி அம்மன் பங்குனித் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினங்களுக்கு மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது.
முறையான தடையின்மைச் சான்று பெறாமல் ராட்டினங்கள் இயக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/33798763-8eb.jpg)
மேலும், ராட்டினங்கள் முறையாக அமைக்கப்படாமல் இருந்ததுடன், மின்வயர்கள் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாகவே புகார்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், ராட்டினங்களில் ஏற ஆர்வமாக வந்த பொதுமக்களும் சிறுவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.