Advertisment

தூத்துக்குடி:தண்ணீர் பிடித்துகொண்டிருந்த 3 பெண்கள் விபத்தில் மரணம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக முதலவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ தூத்துக்குடி, - திருச்செந்தூர் சாலையில், ஓராமாக நின்று தெரு குழாயில் தண்ணீர் பிடித்துகொண்டிருந்தவர்கள் மீது இன்று  காலை 6.30 மணிக்கு நான்கு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்தில் தண்ணீர் பிடிக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி (வயது 50), என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த அமராவதி ( வயது 58 ) , பார்வதி ஆகிய இருவருக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுடைந்தேன்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முகதாய் ( வயது 55) சிறப்பு சிகிச்சை அளிகக்வும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழந்த இரங்லை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் “ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment