Advertisment

'சைக்கிள்' வேகம் குறைந்தால் கனிமொழிக்கு ஆபத்து: தூத்துக்குடி கள நிலவரம்

தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க மற்றும் தா.மா.கா பிரிக்கும் என்றும், கனிமொழிக்கு எதிராக பிரபலமான வேட்பாளர்கள் இல்லை என்பதால், எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், களநிலவரம் வேறு ஒன்றை முன்வைக்கின்றன.

author-image
WebDesk
New Update
Kanimozhi camp

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி (Photo: x/ @KanimozhiDMK)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க மற்றும் தா.மா.கா பிரிக்கும் என்றும், கனிமொழிக்கு எதிராக பிரபலமான வேட்பாளர்கள் யாரும் இல்லை என்பதால், எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், மாற்றுப் பார்வைகளும் களநிலவரமும் வேறு ஒன்றை முன்வைக்கின்றன.

Advertisment

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுறார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரியுமான தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி போட்டியிடுவதன் மூலம் தூத்துக்குடி தொகுதி இந்த முறையும் கவனிக்கப்படும் ‘ஸ்டார்’ தொகுதியாக கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதிக்கு மிகவும் குறைவான நாட்களே இருப்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று களநிலவரத்தையும் புள்ளிவிவரங்களையும் வைத்து ஊடகங்களில் அலசப்படுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பார்ப்போம்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில், கனிமொழி  5,63, 143 வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், 2,15,934 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். அதாவது, கனிமொழி 56.77% வாக்குகள் பெற்றிருந்தார். தமிழிசை சௌந்தரராஜன் 21.77 வாக்குகள் பெற்றிருந்தார்.

அப்போது, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தோல்விக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், துப்பாக்கிச்சூடு, பா.ஜ.க எதிர்ப்பு அலை என பல காரணங்கள் கூறப்பட்டது. 

2024 மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தூத்துக்குடியில் இந்த முறை கனிமொழியை எதிர்த்து அ.தி.மு.க சார்பி, சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பா.ஜ.க கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், த.மா.கா சார்பில் எஸ்.டி.ஆர். விஜயசீலன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், தூத்துக்குடி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க மற்றும் தா.மா.கா பிரிக்கும் என்றும், அவருக்கு எதிராக பிரபலமான வேட்பாளர்கள் யாரும் இல்லை என்பதால், கனிமொழி எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், மாற்றுப் பார்வைகளும் களநிலவரமும் வேறு ஒன்றை முன்வைக்கின்றன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2009-ம் ஆண்டு தி.மு.க-வும் 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க-வும், 2019-ல் மீண்டும் தி.மு.க-வும் வெற்றி பெற்றுள்ளன.  தூத்துக்குடி மாவட்டம், இயல்பாக அ.தி.மு.க வலுவாக உள்ள பகுதி என்றே அறியப்படுகிறது. 

அதே நேரத்தில், தூத்துக்குடியில் இந்த முறை பா.ஜ.க அணி சார்பில் தா.ம.க களத்தில் இருக்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தால் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு அதிருப்தி நிலவுவதால், அங்கேபா.ஜ.க-வைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் யாரும் கடந்த முறையைப் போல பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால், த.மா.கா சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர். விஜயசீலனின் சைக்கிள் சின்னத்தின் வேகம் குறைந்தால் தூத்துக்குடி தொகுதியில் இருமுனை போட்டி என்கிற நிலைக்கு செல்லும் என்று கூறுகிறார்கள்.

கடந்த காலங்களில் தி.மு.க மாநிலம் முழுக்க ஜெயித்து ஆட்சியைப் பிடித்த தேர்தல்களிலும் தூத்துக்குடியில் கணிசமான வெற்றியை அ.தி.மு.க பதிவு செய்திருக்கிறது. அதனால், தூத்துக்குடி மாவட்டம், இயல்பாக அ.தி.மு.க வலுவான பகுதி என்று அறியபடுவதால், அந்த அடிப்படையில் இப்போதும் அங்கு தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் ஓரணியில் திரண்டால் அது கனிமொழிக்கு எதிராக முடியலாம். ஏனென்றால், அ.தி.மு.க தூத்துக்குடியில் கனிமொழிக்கு புத்தூர் வைத்திய கட்டு மருத்துவரை இறக்கி இருக்கிறது. தங்கு தடை இன்றி செயல்படும் விட்டமின் பாய் சுவர் என்று அவர் மீது அ.தி.மு.க தலைமை வைத்த நம்பிக்கை வைத்துள்ளது. அது நடந்தால் கடைசி நேரத்தில் கனிமொழிக்கு சிக்கல் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்கள். 

இதனால், தூத்துக்குடியில் பா.ஜ.க அணியில், சைக்கிள் கொஞ்சம் வேகம் குறைந்தாலும் கனிமொழிக்கு சிக்கல் என்பதாகவே களநிலவரம் உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment