குறிப்பிட்ட சமூகத்தை அவமதித்து டிக்டாக் வீடியோ – பெண் கைது

பட்டியல் சாதி அவமதிப்பு டிக்டடாக் வீடியோ : இந்தியா தண்டனை சட்டம் பிரிவு 153 (A),505(1)(c) களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டி.சுதா, பட்டியல் வகுப்பினர் பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்து டிக்டாக் செயலியிலும், மற்ற  சோசியல் மீடியாக்களிலும் பரப்பி வந்திருந்தார்.

இந்த  வீடியோ, பல மாதங்களாக சோசியல் மீடியாக்களில் பரவி வந்தாலும்,மணிகண்டன் என்ற வழக்கறிஞர் தூத்துக்குடி வடக்கு போலிஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

வழக்கறிஞர் மணிகண்டன் தனது புகாரில், “அவரின் வீடியோ, பட்டியல் வகுப்பு மக்களை  மிகவும் கொசைப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல் துறையினர், டி.சுதாவை தற்போது கைது செய்திருக்கிறது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ” இந்தியா தண்டனை சட்டம் பிரிவு 153 (A) (மதம், இனம், பிறப்பு , வசிப்பிடம் , மொழி போன்றவைகளால் சமூகத்தில் பகைமையை ஏற்படுத்துதல் ) , 505(1)(c)  ( ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திடம் வன்முறையை கட்டவிழ்த்து விடும்படியான செயலை செய்தல் ) போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் .

நீதிமன்றக் காவலில் இருக்கும் டி.சுதா தற்போது நீதிமன்றக் காவலில்,கொக்கிரகுளம் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thoothukudi district women d sudha who promote enmity hatred between communities get arrested by police

Next Story
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை டிச. 13-க்குள் அறிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடுLok Sabha elections 2019 LIVE Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express