தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: வருவாய் வட்டாட்சியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Thoothukudi firing case 3 officials suspended including Revenue District Collector

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுளளார்.

Advertisment

திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளராக உள்ளார். திருமலை தவிர மற்ற 3 போலீஸ்காரர்கள் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை அக். 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்நபர்களின் மீது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: