தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற தயக்கம் காட்டி வருகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 9-ம் தேதி செல்ல இருக்கிறார். அரசு நிவாரண உதவிகளையும் வழங்க இருக்கிறார்.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு நிகழ்வுகளில் 13 பேர் பலியானார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய் உள்ளிட்டவர்களும் ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலர் மே 28-ம் தேதி நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறினர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 20 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 29-ம் தேதி அறிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 9-ம் தேதி தூத்துக்குடி செல்கிறார். இது தொடர்பாக அரசு சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. முதல்வர் செல்வதற்கு முன் தினம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

×Close
×Close