தூத்துக்குடி மக்களவைத் தொகுதி விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி என்ற சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டது.
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி, 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் இந்த தேர்தலில் 5,63,143 வாக்குகளை பெற்றார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எம். புவனேஷ்வரன் 76,866 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார்.
இந்த மக்களவை தொகுதி 6,90,106 ஆண் வாக்களர்களையும், 7,12,098 பெண் வாக்காளர்களையும் கொண்டது.
2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அ.தி.முக. சார்பில் போட்டியிட்ட ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி 3,66,052 பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க வேட்பாளர் பி.ஜெகன் 2,42,050 வாக்குகளை பெற்றார். ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜோயல் 1,82,191 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் கனிமொழியின் செயல்பாடுகள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதால் மீண்டும், அவர் வெற்றிபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“