தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கம்: இயல்பு நிலை திரும்புகிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் சம்பவத்தினால் ஏற்பட்ட பதற்ற நிலை கலைந்து 4 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் தூத்துக்குடி முழுவதும் பதற்றமான நிலை உருவானது. இதையடுத்து இன்று வரை பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. தூத்துக்குடி முழுவதும் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக நிலவி வரும் இந்தச் சூழலில், கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் பொதுமக்கள் அவர்களுக்கான அன்றாட தேவைகளை பெற மிகவும் கடினமாக இருந்து வந்தது. இந்த நிலையைப் போக்கும் வகையில், தற்போது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

தூத்துக்குடி முழுவதும் அனைத்துக் கடைகளும், மார்க்கெட்டுகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. வாகனங்களும் இயல்பாக இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தொரபான போராட்டத்தில் நடந்த துயரத்தின் விளைவாக தூத்துக்குடியில் சோக நிலை மாறாவிட்டாலும், தினந்தோறும் தேவைப்படும் பொருட்கள் வாங்கக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை அளித்துள்ளது.

×Close
×Close