Advertisment

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உடல்களை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும், இறந்தவரின் உடலை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thoothukkudi fire

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும், இறந்தவரின் உடலை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர் பலர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பலியானவர்களின் உடல்களை தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய கோரியும் வழக்கறிஞர் மில்டன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பலியானவர்களின் உடல்களை பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்கும் படி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தேமுதிக பிரமுகர் விஜயகுமார், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் மார்டின் உள்ளிட்டோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளும் இன்று நீதிபதிகள் பாஸ்கரன், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அதேபோல 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். பின்னர் வாதிட்ட அவர், துப்பாக்கி குண்டு பாய்ந்து தான் பனிரெண்டு பேர் பலியாகியுள்ளனர் என்று இரு தரப்பினரும் கூறும் நிலையில், மறு பிரேத பரிசோதனை தேவையில்லை மேலும் சந்தேக மரணம் வழக்குகளில் மட்டுமே தனியார் மருத்துவர்களை பிரேத பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தனியார் மருத்துவர்கள் அனுமதிக்க முடியாது.

காயமடைந்தோர்க்கு உரிய சிகிச்சை அளிக்கபடுகிறது. விசாரணை சுகந்திரமாக நடைபெறுகின்றது. இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றபட்டுள்ளது.

பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனைவரும் மூத்த மருத்துவர்கள். உடலை ஒப்படைக்க கோரி அரசிடம் இதுவரை 5 உயிரிழந்த உறவினர்கள் கடிதம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் படி யாருடைய உடலில் குண்டு இல்லை. துப்பாக்கி குண்டுகள் வெளியேறி விட்டது. இன்னும் ஆறு உடல்களை பிரேத செய்யவில்லை அதற்கு உறவினர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இருப்பினும் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதி தேவையில்லை. இருப்பினும் வழக்கின் தன்மை அறிந்து செயல்படுவதாகவும்,

இதுவரை யாரையும் காணவில்லை என எந்த புகாரும் வரவில்லை என தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள், பல்வேறு உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவும், தடய அறிவியல் நிபுணர்கள் அனுமதிக்க வேண்டும். தற்போதைய விசாரணை அமைப்பு மீது நம்பிக்கை இல்லை. எனவே சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சிபிஐ வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இதே போல் பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை அமல்படுத்த வேண்டும். தற்போது பொது மக்களை காவல்துறையினர் தொடர்ந்து தொந்தரவு செய்ய கூடாது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நீதிபதியை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழரசன் என்பவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தாய் தரப்பில் முறையிடப்பட்டது.

அதே போல் துப்பாக்கி சூட்டில் பலியான சண்முகம் என்பவரின் தந்தை பாலையா என்பவர் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் எனது மகனின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் அதற்காக மருத்துவமனையில் உள்ள சண்முகத்தின் உடலை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க விடுத்த கோரிக்கை தொடர்பான இடைக்கால உத்தரவை பிறப்பித்ததாக அறிவித்தனர்.

அதேசமயம் கொலை வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்துவது, கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai High Court Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment