தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வராதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அங்கு அமைதி திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அங்கு அமைதி திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி நிலவரம் தொடர்பாக இன்று மதுரை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: ‘இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு. இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். நியாயமா மோடி நேரடியா வந்திருக்கணும். இல்லைன்னா மத்திய அமைச்சராவது வந்திருக்கணும். ஒரு அனுதாபமாவது தெரிவித்திருக்கணும். இதை தெரிவிக்காதது வெட்கக்கேடு.’ என்றார் ஸ்டாலின்.

‘இணையதளம் முடக்கத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படவில்லையே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ‘ஆட்சியே இயங்கவில்லை என ஒரே வரியில் கூறி வருகிறேன். ஆட்சி இயங்கினால்தான் இதையெல்லாம் நாம் கேட்க முடியும்’ என்றார் அவர்.

×Close
×Close