தூத்துக்குடி வல்லநாடு பகுதியில் நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடியும் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisment
ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது குற்றவாளிகள் வெடிகுண்டு வீசி உள்ளனர். இதில் போலீஸ் சுப்பிரமணியம் பலியானார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மேலும் ஒரு போலீஸ் படுகாயம் அடைந்து உள்ளார்.
போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒருவரை கைது செய்தனர். ஆயுதங்களுடன் வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் வெடிகுண்டு வீசிய துரைமுத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெடிகுண்டு வீசியபோது ரவுடி துரைமுத்துவும் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
Advertisment
Advertisements
போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒருவரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil