பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தால் 3 1/2 மடங்கு விலை; அரசு வேலை: எ.வ வேலு | Indian Express Tamil

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தால் 3 1/2 மடங்கு விலை; அரசு வேலை: எ.வ வேலு

Chennai Tamil News: பரந்தூர் விமான நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலத்திற்கு மூன்றரை மடங்கு பணம் தருவதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தால் 3 1/2 மடங்கு விலை; அரசு வேலை: எ.வ வேலு
பரந்தூரில் வசிப்பவர்கள் (Express Photo)

Chennai Tamil News: சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது. அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு பணம் அதிகம் தருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஈரோடு மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க மலைப்பாதைகளை விரிவாக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் கணக்கிடப்படும் என்ற அமைச்சர் கூறினார். மேலும், மூன்றரை மடங்கு பணம், வீட்டில் ஒருவருக்கு அரசின் பரிந்துரையோடு படிப்பு ஏற்ப வேலை வழங்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” ஒவ்வொரு விவசாய நிலம் தற்பவர்களுக்கும், அதற்குரிய பணமும், புதிய வீடு கட்டுவதற்கான இடமும் வழங்குகிறோம். விமான நிலையத்திற்கு அருகிலேயே உங்கள் ஊர் மக்கள் ஒற்றுமையாக இடம் எடுத்து வீடு கட்டிக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், வீடு கட்டுவதற்கு பணம் தருகிறோம். அனைத்து உதவிகளையும் மக்களின் மனம் அறிந்து முதமைச்சர் தெரிவிப்பர், அவருடைய கருத்தை இங்கே கூறுகிறேன். எந்த விவசாயிகளையும் துன்புறுத்தி இந்த நடவடிக்கையில் இறங்கமாட்டோம். முறையாக அவர்களின் அனுமதியை கேட்டு தான் இந்த முடிவை எடுப்போம். சென்ற அரசாங்கத்தை போல நடந்துகொள்ள மாட்டோம்” என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Three and half times the cost of land for parandhur airport

Best of Express