சென்னையில் திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கட்டப்பட்டு வரும் 3 பாலங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை பெரு நகர மாநகராட்சி நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் இருந்து ஓட்டேரி நுல்லாக வழியாக செல்லும் பாலம் ரூ. 43.46 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இங்கு சாலை அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தவிர, கொளத்தூர் மெயின் ரோடு மற்றும் ஐ.சி.எப் சாலையை இணைக்கும் அண்ணா நகரில் உள்ள பாலம் ஏப்ரல் பிற்பகுதியில் பணிகள் முடிக்கப்படும். தி.நகர் ஸ்கைவாக் பாலம் பிப்ரவரிக்குள் தயாராகிவிடும். எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் கட்டுமானம் பணிகள் காரணமாக ஏப்ரலில் முழு பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil