மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள்; தேடும் பணி தீவிரம்
மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் ஆற்றில் குளிக்க 10 மாணவர்கள் இறங்கிய நிலையில், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் ஆற்றில் குளிக்க 10 மாணவர்கள் இறங்கிய நிலையில், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க 10 மாணவர்கள் இறங்கிய நிலையில், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் பத்து பேர் இன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகர் மாம்பட்டி என்ற இடத்திற்கு பவானி ஆற்றில் குளிப்பதற்கு வந்துள்ளனர்.
Advertisment
Advertisements
பத்து பேரும் பவானி ஆற்றில் ஓரத்தில் உள்ள சிவகுமார் என்பவரது தோட்டத்தினுள் புகுந்து பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பத்து மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர்.
இதில் ஏழு பேர் மரக்கிளைகளையும் செடி கொடிகளை பற்றி தப்பினர் இருப்பினும் சுரேந்திரன், கனீஷ்க்கர், ராஜதுரை ஆகிய மூன்று மாணவர்கள் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.
பவானி ஆற்றில் குளிக்க வந்த 3 மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”