tamil nadu get smart city awards: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் பல்வேறு பிரிவுகளில் ஸ்மார்ட் சிட்டி விருதுகளைப் வென்றுள்ளன.
இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுகள் போட்டி என்ற தலைப்பில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், கோயம்புத்தூர் (Covai) மாநகராட்சி நிதிச் செயல்பாடுகள், மாதிரிச் சாலைகள், ஏரிகள் புனரமைப்பு ஆகிய மூன்று முதல் பரிசுகளைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து, தஞ்சாவூர் (thanjavur) நகரின் கலாச்சார மேம்பாடு மற்றும் வரலாற்றைப் பராமரித்தல் தொடர்பான திட்டங்களுக்காக மாநகராட்சிக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்குதல் பிரிவில் தூத்துக்குடி (tuticorin) மாநகராட்சி 3ம் இடம் வென்றது. இதனை, இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை (செப்.27) வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“