scorecardresearch

சென்னையில் ஜி 20 மாநாடு: ஜன.31-ல் தொடக்கம்

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஜி 20க்கான நிகழ்வுகள் நடத்தப்படுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The G20 summit will be held in Puducherry tomorrow
புதுச்சேரியில் ஜி20 மாநாடு இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஜி 20க்கான நிகழ்வுகள்
நடத்தப்படுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் டிசம்பர் 5 ஆம் தேதி நிகழ்வு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கலந்துரையாடினார்.

சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 02ஆம் தேதி வரை முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வெளிநட்டைச்சேர்ந்த பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி இந்த நிகழ்வின் மூலம் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Three days g20 conference in tamil nadu from january 31st 2023