Advertisment

மணல் குவாரிகளுக்கு 3 நாள் லீவாம்; மணல் மாஃபியாக்களின் பல கோடி ரூபாய் கொள்ளை அம்பலம்; 3 அதிகாரிகளுக்கு சிக்கல்

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மணல் கொள்ளையில் தனிநபர்கள் ஈடுபட்டது அமலாக்கத்துறை சோதனையின்போது வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:

author-image
WebDesk
New Update
Sand Mafia

மணல் மாஃபியாக்களின் பல கோடி ரூபாய் கொள்ளை அம்பலம்; 3 அதிகாரிகளுக்கு சிக்கல்

தமிழகத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், திருவையாறு, கொள்ளிடம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்றாலும், இந்தப் பகுதிகளில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மணல் கொள்ளையில் தனிநபர்கள் ஈடுபட்டது அமலாக்கத்துறை சோதனையின்போது வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:

Advertisment

sand mafia

திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீண்டது. தினமும் காலை 11 மணிக்குள் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இந்த மணல் குவாரியில் பணம் வசூல் ஆகியது தெரியவந்திருக்கின்றது.

குவாரியில் உள்ள ஒரு கண்டெய்னர் அறையில் பணம் எண்ணுவதற்காக 28 இயந்திரம் உள்ளே வைக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்தது. அரசு நிர்ணயித்த மூன்று யூனிட்டிற்கு 624 ரூபாய் மணல் விலையாம். யாருக்கும் நேரடியாக குவாரியில் மணல் கொடுக்கப்படுவதில்லை. ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இங்கே அமலாக்கத்துறை சோதனையில் டோக்கன் கொடுப்பதற்கு ஒரு ஏஜென்ட்டும், அவருக்கும் ஒரு கமிஷன் என்ற தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

sand

மேலும், இவர்கள் கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய்க்கு மணல், 16 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள மணல் இந்த யூனிட்டிகளின் அளவு இதற்கான தொகை எதுவும் நீர்வளத்துறை அதிகாரிகளோ, கனிம வளத்துறை அதிகாரிகளோ யாரும் கணக்கிடுவதில்லை. ஒரு தனிநபர் நேரடியாக ஆயிரக்கணக்கான லாரிகளை வைத்து கொள்ளிடம் ஆற்றில் அரசு பர்மிட் இல்லாமலேயே மணல் அள்ளுவது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நாள் ஒன்றுக்கு இந்த குவாரியில் 10 கோடி ரூபாய் வரை வசூல் என அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், தங்களது காரில் எடுத்துச் சென்றனர். 

sand

மேலும், மணல் சேமிப்பு கிடங்கிற்கு வந்த நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சாதிக்பாஷா, உதவியாளர் சத்தியராஜ் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். 

விடிய விடிய நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச்சென்று விசாரிக்க அமலாக்கத்துறையினர் முடிவு செய்தனர். பின்னர், நிபந்தனைகளுடன் அவர்களை விடுவித்து கூப்பிடும்போது சென்னை அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆஜராக எழுதி வாக்கிக்கொண்டு அவர்களை விடுவித்தனர். அவர்களின் செல்போன்களையும்,  எண்களை கைப்பற்றி அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் சேகரித்து பதிவு செய்துள்ளனர்.

Sand Mafia

முன்னதாக, நேற்று அமலாக்கத்துறையினரின் சோதனையை அடுத்து திருச்சி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரி உள்பட பல்வேறு மணல் குவாரிகளுக்கு 3 நாட்கள் விடுப்பு விடப்பட்டிருப்பதாக அங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மணல் குவாரிப் பகுதிகளில் பெரும் அமைதி நிலவுவது குறிப்பிடத்தக்கது. தனிநபர் வருமானத்தின் மூலம் கமிஷன் பெற்ற பல்வேறு இடைத்தரகர்கள் உள்பட பலரும் தற்போது அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment