வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கத்தை, உள்ளாடைகளில் கடத்திய மூன்று பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, இலங்கை, குவைத், அபுதாபியில் இருந்து தங்கம் கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, இலங்கையில் இருந்து வந்த ஆண் பயணியை சோதித்தபோது, உள்ளாடைக்குள் 49 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள 911 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதைபோல், அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து 42 லட்சத்தி 38 ஆயிரம் மதிப்புள்ள, 792 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
குவைத்தில் இருந்து வந்த பெண் பயணியிடம் சோதனை மேற்கொண்டபோது, அவரது உடமைகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட 43 லட்சத்தி 23 ஆயிரம் மதிப்புள்ள 805 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், மூன்று பேரிடம் இருந்து மொத்தம் ஒரு கோடியே 34 லட்சத்தி 96 ஆயிரம் மதிப்புள்ள, 2 கிலோ 514 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனால், மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil