Three Language Policy TN CM Edappadi K Palaniswamy tweet : இந்த வாரம் தமிழகத்தின் பேசுபொருளாக இருந்தது மும்மொழிக் கொள்கை தான். இந்த கொள்கைக்கு பலதரப்பட்ட மக்களும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். எனவே மனிதவளம் மேம்பாட்டுத்துறை அறிவித்த திட்ட வரைவில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை.
Three Language Policy TN CM Edappadi K Palaniswamy tweet
ஆனால் மாணவர்கள் தங்களின் விருப்பம் போல் மூன்றாவது மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு பின்பு அது நடைமுறையும் ஆக்கப்பட்டது. இன்னும் பலரின் மனதில் ஏன் குழந்தைகள் மூன்றாவது மொழி கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்ப வந்த நிலையில், மும்மொழிக் கொள்கை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டினை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதுக்குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தமிழ் பேசாத பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக நீங்கள் ஏன் தமிழை அறிவிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார். மேலும் உலகின் மிகத் தொன்மையான மொழிக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இது இருக்கும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க : மும்மொழிக் கொள்கை திருத்தப்பட்ட வரைவிற்கு 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு! காரணம் என்ன?
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்த கருத்தை முதல்வர் பழனிசாமி தற்போது நீக்கியுள்ளார். காலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இத்தகைய பதிவுக்கு எதிர்கட்சி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அவரின் பதிவு ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.