கடந்த 27ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. புதுத்துணி, பட்டாசு, இனிப்பு பலகாரம் தீபாவளியின் கதைகளாய் இருந்தாலும், சென்னையில் இன்னொரு கதையும் நடந்தேறியிருக்கிறது. சென்னை தீபாவளி அன்று மட்டும் பல பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுகாக மூன்று கொலைகள் நடந்தேறியுள்ளன.ஆனால், மூன்று கொலைகளும் உள்ள அடிப்படை ஒற்றுமை மனித சமூகத்தில் வேரூன்றியிருக்கும் வன்மங்கள் .
அ.தி.மு.க பிரமுகரும் , ஐ.சி.எப் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாகவும் பணியாற்றிவந்த ஜானகிராமன் தனது நண்பருடன் கொளத்தூரில் பைக்கில் வந்த போது, ஒரு கும்பல் கத்தி, அரிவாளால் ஜானகிராமனை தாக்கியுள்ளனர். 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் ஜானகிராமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் பலனளிக்கவில்லை . பெரவள்ளூர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இளங்காளியம்மன் கோவிலை ஜானகிராமன் நிர்வகித்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணாமாக கொலைகள் நடந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இரண்டாவது கொலை, கலங்கரைவிளக்கம் நொச்சிநகரில் நடந்தேறின. மயிலாப்பூர் மாயாண்டிக் காலனியை சேர்ந்த கார்த்திக் தனது நண்பருடன் தீபாவளியைக் கொண்டாட நொச்சிநகருக்கு சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்த பூபாலன் என்பவரோடு ஏற்பட்ட சிறு தகாராறு கார்த்திக் உயிரையே பறித்துவிட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், தீபாவளியன்று கார்த்திக்கின் செல்போனை பூபாலன் வைத்துக் கொண்டு நாளை வந்து வாங்கிக்கொள் என்று மிரட்டப்பட்டுள்ளார், அடுத்த நாள் காலையில் செல்போன் வாங்க சென்ற போது இருவருக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, பூபாலன் கார்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்றாவது கொலை சென்னை பாடிபுது நகரில் நடந்திருக்கிறது. அழகு( எ) அழகுராஜ் என்பவரை தெருவில் வைத்தே ஆறு பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது. இந்த அழகுராஜ் 2014ம் ஆண்டு சிவலிங்கம் என்பவரின் கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழி தீர்க்கும் சம்பவக் கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.