சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிற்கு அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, சத்தியம் கிராண்ட் என்ற பிரபல தனியார் ஓட்டலில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்வதற்காக, கட்சிப்பட்டை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), மற்றும் திருமலை (18) ஆகிய மூன்று பேர் வந்திருந்தனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியதால் விஷவாயு தாக்கி சுமார் 30அடி ஆழம் கொண்ட தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு சிக்கிக்கொண்டனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் முன் தங்களது உடைகளை வெளியே வைத்துவிட்டு சென்றதால், அவர்களது உறவினர்களால் அடையாளம் காண முடிந்தது.
இந்த சம்பவத்தைக் குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15 அடி அளவிற்கு கழிவை முதல்கட்டமாக வெளியே இறைத்தனர்.
பல மணி நேர தேடலுக்கு பிறகு, மூவரும் கழிவு நீரின் சகதியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
முதற்கட்டமாக நவீன்குமார் மற்றும் திருமலை ஆகிய இருவரது உடலை மீட்ட பிறகு ரங்கநாதன் என்பவரின் உடலையையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil