தமிழ்நாடு தடுப்பூசி உற்பத்தி மையங்களை இயக்க முன்வந்துள்ள 3 மருந்து நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டுவில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை இயக்க 3 மருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ma subramaniyan

தமிழ்நாட்டில் செங்கல்பட்டுவில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை இயக்க அர்விந்த், மோர்பென் மற்றும் கோவாக்ஸின் உற்பத்தி செய்கிற பாரத் பயோடெக் ஆகிய 3 மருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட கோவிட் தடுப்பூசிக் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி கோரிய அறிவிப்பில் எந்த நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. தற்போது, அர்விந்த், மோர்பென் மற்றும் கோவாக்ஸின் உற்பத்தி செய்கிற பாரத் பயோடெக் ஆகிய 3 மருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செங்கல்பட்டுவில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல, குன்னூரில் உள்ள பாஸ்ச்சர் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி பணியைத் தொடங்குவதற்கான பணிகள் முன்னேற்றம் அடைந்த நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மற்றும் குன்னூர் ஆகிய 2 இடங்களிலும் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ரேபிஸ், அம்மை, ஜப்பானிய என்செபாலிடிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக யுபிஏ அரசாங்கத்தால் 2012ல் 100 ஏக்கர் பரப்பளவில் ஐ.வி.சி நிறுவப்பட்டது. ஆனால், இந்த இடம் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வசதியை குத்தகைக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவியாவை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள ஐ.வி.சி மற்றும் பாஸ்ச்சர் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என நாங்கள் ஒன்றிய அரசிடம் கேட்போம் என்று வியாழக்கிழமை கூறினார்.

தமிழ்நாட்டுக்கு கோவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை டெல்லி புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.

தினசரி தடுப்பூசி போடப்படும் சராசரி எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் மாநிலத்தில் இன்னும் 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. அதனால், சுகாதார அமைச்சகத்திடம் மேலும் 2 கோடி தடுப்பூசிகளை கேட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கெனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக உடனடியாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் இந்த சிறப்பு ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

செங்கல்பட்டுவில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் பிரிவில் தடுப்பூசிகள் தயாரிக்க மூன்று நிறுவனங்கள் அணுகியுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பாஸ்ச்சர் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை சீக்கிரம் தொடங்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துவோம்.” என்று கூறினார்.

ரூ.700 கோடியில் நிறுவப்பட்ட எச்.எல்.எல் பிரிவு பத்தாண்டுகளுக்கு மேலாக சும்மா கிடக்கிறது. இந்த வளாகத்தைப் பயன்படுத்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக 3 லட்சத்துக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் தடுப்பூசி விகிதத்தில் வீழ்ச்சியைக் கண்டது. புதன்கிழமை, அரசு 2,07,259 டோஸ் தடுப்பூசி வழங்கியது – அதில் 1,57,689 டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 49,570 டோஸ் கோவாக்சின் அடங்கும். இது மொத்த தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை 1.7 கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். இது மாநில மக்கள்தொகையில் 5% க்கும் குறைவு ஆகும்.

சில மாவட்டங்களில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. கோவாக்சின் கிடைப்பது குறித்த அறிவிப்பு வெளியானபோது, பொதுமக்கள் குறிப்பாக மத்திய மாவட்டங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி முகாம்களை நோக்கி திரண்டனர். புதுக்கோட்டையில் தடுப்பூசி மையத்திற்கு 2,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால், அங்கே 500 டோஸ்கள் மட்டுமே இருந்தன. சென்னையில் தடுபூசி பற்றாக்குறை காரணமாக மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் இருந்து மக்கள் புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் செங்கல்பட்டுவில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை இயக்க அர்விந்த், மோர்பென் மற்றும் கோவாக்ஸின் உற்பத்தி செய்கிற பாரத் பயோடெக் ஆகிய 3 மருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three pharmaceutical companies expressed interest to operate vaccine park in chengalpet

Next Story
Tamil News Highlights: பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள்: ஸ்டாலின் ஆலோசனை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com