வேலூர் மலை கிராம மக்களிடம் நகை,பணம் கொள்ளை; சோதனைக்கு சென்ற 3 காவலர்கள் கைது

மூன்று காவல்துறையினர் மீதும் ஐ.பி.சி. 545 மற்றும் 380ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tamil Nadu , Tamil Nadu police

 Janardhan Koushik

Tamil Nadu : வேலூர் மாவட்டத்தில் உள்ள குருமலைப் பகுதியில் அமைந்துள்ளது நாச்சிமேடு கிராமம். அதனை ஒட்டியுள்ள அரியூர் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், கான்ஸ்டபிள்கள் யுவராஜ் மற்றும் இளையராஜா. ரோந்து பணியின் போது அவர்கள் இளங்கோ மற்றும் செல்வம் என்பவர்களின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 50 லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

வீடு திரும்பிய கிராம மக்கள் தங்கள் வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதும் அதற்கும் காவல்துறையினர் தான் காரணம் என்றும் சந்தேகப்பட்டார்கள். அதனை தொடர்ந்து உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சுபா அசோக்கிற்கு தகவல் கொண்டு சேர்க்கப்பட்ட்டது. அதன் பிறகு அங்கு சென்ற அவர் விசாராணை மேற்க்கொண்டார். காவலர்கள் தாங்கள் எடுத்து வந்த பொருட்களை கிராம மக்களிடம் திருப்பி கொடுத்துள்ளனர்.

கடந்த வாரமும் இதே போன்று அங்கு சோதனை நடைபெற்றதை கூறி கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். இது கிராம மக்களின் சூழ்ச்சியாக இருக்கும்.ஏன் என்றால் அவர்கள் அங்கே சென்று சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு இடையூறாக இருக்கிறார்கள். கள்ளச்சாரயம் தயாரிக்கும் நபர்கள் சோதனை நடைபெற்ற போது அங்கே தான் வெவ்வேறு இடங்களில் மறைந்திருந்தனர். காவல்துறையினர் மலையில் இருந்து கீழே இறங்கவில்லை. அவர்கள் மற்ற பொருட்களை வைத்த இடத்தில் தான் பணத்தையும் வைத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோவில் முழுமையான விவரம் காட்டப்படவில்லை என்று நம்பத்தகுந்த நபர் தகவல் அளித்துள்ளார்.

மூன்று காவல்துறையினர் மீதும் ஐ.பி.சி. 545 மற்றும் 380ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுபா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். இதற்கும் முன்பும் இந்த பகுதியில் சாராயம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. பலர் கைது செய்யப்பட்டன. எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாங்கள் அங்கே சோதனைக்கு சென்றோம். கிராமவாசிகள் தங்களின் உடமைகள் காணாமல் போனதாக தெரிவித்த நிலையில் காவலர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three police officers in tamil nadu booked for alleged burglary

Next Story
News Highlights : தமிழகத்தில் ஒரு கோடியை கடந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express