/tamil-ie/media/media_files/uploads/2021/04/rajasthan-policeup.jpg)
Three Police Personnel died in 24 hours in Chennai Tamil News
Three Police Personnel died in 24 hours in Chennai Tamil News : சென்னையில் 24 மணி நேரத்தில் மூன்று காவல் அதிகாரிகள் கோவிட் -19-க்கு பலியாகியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, அபிராமபுரம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட புலனாய்வு பிரிவின் தலைமை கான்ஸ்டபிள் டி. கருணாநிதி (48), ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், ஸ்.பி. சி.ஐ.டி மெட்ரோ பிரிவுடன் இணைக்கப்பட்ட தலைமை கான்ஸ்டபிள் எஸ்.முருகேசன் (51), கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் புகார் காரணமாக அனுமதிக்கப்பட்டார். கொடுங்கையூரில் உள்ள எம்.கே.பி நகரில் வசிக்கும் அவர், மருத்துவமனையில் கோவிட் -19 சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருடைய உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்துள்ளார்.
இதேபோல் மற்றொரு கான்ஸ்டபிள் கடந்த சனிக்கிழமை காலை ஓமந்தூரார் தோட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 காரணமாக இறந்தார். பலியானவர் அண்ணா நகரின் போக்குவரத்து புலனாய்வு பிரிவின் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த மகாராஜன் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கோவிட் -19-க்கு பாசிட்டிவ் சோதனை செய்த பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு சென்னையில் தொற்றுநோய் ஏற்பட்டதிலிருந்து, 3,300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாசிட்டிவ் சோதனை செய்துள்ளனர். அவர்களில் பலர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது, 100 காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.