யானையை தாக்கிய இளைஞர்கள்; 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தது வனத்துறை

Three tribal youth attack wild elephant in tirupur, case filed against them: பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கற்களை வீசியும் குச்சியால் அடித்தும் துன்புறுத்திய வீடியோக்கள் இன்று (வியாழக்கிழமை) காலை சமூக ஊடகங்களில் வைரலாகின.

திருமூர்த்தி அணை குடியிருப்பு பகுதிக்கு அருகே காட்டு யானைகளை துன்புறுத்தியதாக மூன்று பழங்குடி இளைஞர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட வன அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கற்களை வீசியும் குச்சியால் அடித்தும் துன்புறுத்திய வீடியோக்கள் இன்று (வியாழக்கிழமை) காலை சமூக ஊடகங்களில் வைரலாகின.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணை பகுதியில், ரிசர்வ் காடுகளுக்குள் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் பழங்குடி இளைஞர்கள், புதன்கிழமை காலை, தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இரண்டு யானைகளையும் ஒரு குட்டி யானையையும் பார்த்ததும் அதை துன்புறுத்த தொடங்கியுள்ளனர்.

அவர்கள் யானைகளை கற்களை வீசி தாக்கினர். இளைஞர்களில் ஒருவர் மரக்கட்டையை கொண்டும் யானையை தாக்கினார். யானையும் திரும்ப தாக்கும்போது தப்பி ஓடினர். பின்னர் மறுபடியும் யானையை தாக்கினர். இந்தச் சம்பவங்களை அங்கிருந்து ஒருவர் தனது தொலைப்பேசியில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை மாலை தங்களுக்குத் தெரிய வந்ததாகவும், மூன்று பழங்குடி இளைஞர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த மூவரையும் கைது செய்ய வனத்துறை அதிகாரிகள் குழு பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three tribal youth attack wild elephant case filed against them

Next Story
சங்கரையா, நல்லகண்ணு… மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com