scorecardresearch

சென்னையில் ரூ 27 கோடி மோசடி: பரஸ்பர சகாய நிதி நிறுவன பெண் இயக்குனர்கள் 3 பேர் கைது

430 முதலீட்டாளர்களிடம் இருந்து ₹27.63 கோடி அளவுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக காவல்துறையினரிடம் புகார்கள் வந்துள்ளன.

express news

சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததாக 3 பெண் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெபாசிட்களுக்கு அதிக வட்டி தருவதாக உறுதியளித்து, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து செலுத்தாமல் ஏமாற்றியதால் 3 பெண் இயக்குனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால், 430 முதலீட்டாளர்களிடம் இருந்து ₹27.63 கோடி அளவுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக காவல்துறையினரிடம் புகார்கள் வந்துள்ளன.

தனியார் வங்கி சாரா நிதி நிறுவனமான பரஸ்பர சகாய நிதி (பெரம்பூர்) லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அதன் இயக்குநர்கள்/உரிமையாளர்களாக இருந்த மூன்று பெண்களை சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு (EOW), CID கைது செய்துள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் சேர்ந்து பொதுமக்களிடம் இருந்து 10.8% வட்டி விகிதம் என்று கூறி பணம் வசூலித்தனர்.

இந்த நிறுவனம் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டித் தொகை மற்றும் அசல் தொகையை செலுத்தத் தவறிவிட்டது. ஏப்ரல் 16 அன்று, EOW தலைமையகம், சென்னை நிறுவனம் மற்றும் அதன் அனைத்து இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான இ.வசந்தி, இயக்குநர் கே.ராஜம், இ.சக்தி ஐஸ்வர்யா ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், இதுபோன்ற மோசடிகள் குறித்து தங்கள் கவனத்திற்கு வந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

EOW ஐ அதன் ஹெல்ப்லைன் எண்: 044-22504332 மற்றும் மின்னஞ்சல் முகவரி: [email protected] இல் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Three women arrested for financial firm fraud