/indian-express-tamil/media/media_files/2025/11/04/weather-man-2025-11-04-12-02-57.jpg)
வட தமிழகத்தில் ஆட்டம் காண தயாராகும் மழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
வடதமிழக மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, "தமிழ்நாடு வெதர்மேன்" என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வானிலை நிலவரங்கள் குறித்துத் தெரிவிக்கும் அவர், இன்று வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும், மேலும் புதுச்சேரி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thunderstorms again possible today in isolated places in North Tamil Nadu in KTCC (Chennai and Surrounding districts), Pondy, Cuddalore, Ranipet, Vellore, Tiruvallur, Mayildauthurai, Villupuram. Dry weather to continue in other districts.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 4, 2025
Meanwhile it is another record-breaking… pic.twitter.com/yy2GiafFj2
சென்னையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் மாதத்தின் முதல் 3 நாள்களில் மிகவும் அதிக வெப்பம் பதிவானது. தமிழகத்தில் நவம்பர் மாதம் இயல்புக்கும் குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வரும் நாள்களில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடையும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை மையம்
இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, திங்கள்கிழமை காலை அதே பகுதியில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை (நவ. 4) நண்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர்-பங்களாதேஷ் கடற்கரையையொட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (நவ. 4) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us