தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது; அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது; அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷாம் திவான், இந்த ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி சிப்காட்டில் தொடங்கப்பட்ட வரலாறு, மேலும், இந்த ஆலையை மூடியதற்காக, 5 முகாந்திரக் காரணங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது உள்ளிட்ட இந்த வழக்கின் பின்னணி குறித்து மிக விரிவாகத் தெரிவித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், சுற்றுச்சூழல் விதிகளை வேதாந்தா நிறுவனம் பின்பற்றி உள்ளதா? தூத்துக்குடியில் இந்த ஆலை அமைக்க உகந்ததா? என பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், ஒரு நிபுணர் குழுவை அமைப்பதற்கான ஒரு யோசனையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்வைத்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் இந்த யோசனைக்கு தமிழ்நாடு அரசு இசைவு தெரிவிக்கவில்லை என்றாலும், வேதாந்தா நிறுவனத்தில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாம் திவான் இந்த யோசனையை ஏற்றுள்ளார்.
இருப்பினும், இந்த நிபுணர் குழுவில், ஐ.ஐ.டி நிபுணர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள், 3 சுற்றுச் சூழல் நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அந்த குழு அறிக்கை அளிக்க ஒரு மாதம் காலம் அவகாசம் அளிக்கலாம் என்றும் மாநில மக்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளதைப் போல, இந்த விவகாரத்தில் தேசிய நலனையும் பார்க்க வேண்டி உள்ளது என்றும் உச்ச நிதிமன்றம் கூறியது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், வேதாந்தா நிறுவனத்தின் வாதங்கள் இன்னும் முடிவடையாததாலும், உச்ச நீதிமன்ற அமர்வு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுதோறும் 4,00,000 டன் உலோக தாதுக்களை உற்பத்தி செய்தது, இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை கொண்டிருந்தது மற்றும் 5,000 பேருக்கு நேரடியாகவும், 25,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தந்தது உள்ளிட்டவற்றை வேதாந்தா தரப்பு stமுன்வைத்து வாதிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.