சென்னைக்கு அருகே உள்ள பரந்தூரில் வரவிருக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் குறித்த தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வை நடத்துவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) திட்டமிட்டிருக்கிறது.
தொழில்நுட்ப திட்டமிடலில் பல நிலைகள் உள்ளதால், பல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை வரவழைத்து ஆய்வை மேற்கொள்ள திட்டமிடுவதாக தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை கூறுகிறது.
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையத்திற்கு முன்மொழியப்பட்ட இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எழுப்பப்பட்ட குறைகளைப் பற்றி அரசாங்கம் கவனித்து வருவதாகவும், அதற்கு நாட்டின் சிறந்த சிவில் இன்ஜினியரிங் துறையைக் கொண்ட நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். மேலும், இரண்டாவது விமான நிலையம் கட்டுவதோடு தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளும் இருப்பதாகக் கூறுகிறார்.
புதிய விமான நிலையம் இல்லாவிட்டால், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதாரப் நெருக்கடி கடுமையாகும் என்று ஆசியா-பசிபிக் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (CAPA India) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் கபில் கவுல் தெரிவித்துள்ளார்.
TAFE லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினருமான மல்லிகா சீனிவாசன், திறன் விரிவாக்கம் அவசரமாக தேவை என்று சுட்டிக்காட்டினார். ரயில்வே மற்றும் சாலை வழியாக சிறந்த இணைப்பை மாநிலம் கொண்டுள்ளது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil