scorecardresearch

ஆன்லைனில் புலி குட்டி விற்பனை: இளைஞர் கைது

வேலூரில் ரூ. 25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் புலி குட்டி விற்பனை: இளைஞர் கைது

வேலூரில் ரூ. 25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைனில் புலி குட்டிகள் விற்பனை செய்யத் தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள் அணுகலாம் என்று விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வனச்சரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வேலூர் வனத் துறையினர் வாட்ஸ் அப்பில் வந்த எண் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த செல்போன் வைத்திருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த பார்த்திபன் வயது என்பதும், அவர் வேலூர் சார்பனா மேடு என்ற பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து வேலூர் வனத் துறையினர் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், பூனைக்குட்டிக்கு சாதம் பிசைந்து வைப்பதைப்போல புலிக்குட்டிகளுக்கு சாதம் பிசைந்து வைக்கும் படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அந்த படத்துக்குக்கீழ் `இது மூன்று மாத குட்டி. புக்கிங் செய்தால் 10 நாள்களில் டெலிவரி செய்யப்படும். விலை ரூ. 25 லட்சம்  என்று பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த வீடு முழுவதும் தேடிப் பார்த்த போது வனத்துறையினரிடம் புலிக்குட்டி எதுவும் சிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் தமிழ். இவர் சென்னையில் சென்னை செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரும் பார்த்திபனும் நண்பர்கள். இவர்கள் தமிழகத்தில் விலங்குகள் தொடர்பாக கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு செல்வது வாடிக்கை. செல்லப் பிராணிகளின் கண்காட்சியில் தங்களுக்குப் பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி ஆன்லைன் மூலமாகவும், கடை மூலமாகவும் கூடுதல் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், தற்போது பார்த்திபன் வாட்ஸ்அப் மற்றும் அவரது ஸ்டேட்டஸில் புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்துள்ளார். இது வெறும்  மோசடியா அல்லது உண்மையில் புலிக்குட்டி அவரிடம் உள்ளதா என்பது குறித்து வேலூர் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பக வனத்துறையின் உயர் அதிகாரிகூறுகையில் “ சமீபத்தில் வன விலங்குகளை  கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் சதவிகிதம் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை குட்டி தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டது. இதுபோல ஆமைகளும் கடத்தப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tiger cubs on sale online man arrested