சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 'உங்கள் கருத்துகளுக்கு வண்ணம் கொடுங்கள்' என்ற தலைப்பிலான வண்ண போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
இது மட்டுமல்லாது விலங்குகள் குறித்த கேள்விகளுக்கு நிபுணர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் பதில் அளிக்கும்விதமாக லைவ் வெபினார் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெபினார், உயிரியல் பூங்காவின் யூடியூப் சேனலில் மதியம் 3.30 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது.
இதில் பதிவு செய்துகொள்வதற்கு யாதொரு கட்டணமும் இல்லை. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.
இந்த பூங்காவில், தற்போதைய அளவில் 13 வெள்ளைப் புலிகளும், 18 வங்காள புலிகளும் உள்ளது. வனப்பகுதிகளில் அனாதையாக திரிந்த மற்றும் தாய்ப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட புலிகளின் பாதுகாப்பு இடமாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விளங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil