Advertisment

வனத்துறையினரை கண்டு பின்வாங்கிய புலி; வீடியோ வைரல்

வால்பாறை அருகே உள்ள கருமலை சாலையில் இரவு சிறுத்தை சாலையில் கடக்கும் வீடியோவை வாகனத்தில் சென்றவர்கள் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Anaimalai Wild Animals

வால்பாறை பகுதியில் தனியார் எஸ்டேட் வனப்பகுதி அருகே உள்ளதால் வனவிலங்குகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வருகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 coimbotore | ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உள்பட்ட ஆறு வனச் சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் வால்பாறை பகுதியில் தனியார் எஸ்டேட் வனப்பகுதி அருகே உள்ளதால் வனவிலங்குகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வருகின்றன.

இது குறிப்பாக வால்பாறை அருகே உள்ள கருமலை சாலையில் இரவு சிறுத்தை சாலையில் கடக்கும் வீடியோவை வாகனத்தில் சென்றவர்கள் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

Advertisment

கோவை: வனத்துறையினரை கண்டு பின்வாங்கிய புலி #CoimbatoreNews

Posted by IETamil on Wednesday, January 24, 2024

இதையடுத்து வால்பாறை நாற்பதாவது கொண்டை ஊசி வளைவு வனப்பகுதி வனத்துறையினர் வாகனத்தில் சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியே வர முயன்ற ஒற்றைப்புலி திடீரென பின்வாங்கி வனப்பகுதிக்கு சென்றது. 

இதை வனத்துறையினர் தங்களது மொபைல் போனில் வீடியோ படம் எடுத்துள்ளனர். தற்போது இரு வீடியோக்களும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து, “வனத்துறையினர் கூறுகையில் புலி, சிறுத்தை, கரடி நடமட்டம் அதிகம் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதி அருகே தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டாம்” என்றார்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment