கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு, இலங்கை காலனி உள்ளிட்ட பகுதிகளில் புலி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்தப் புலி, ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களை தாக்கியது. தொடர்ந்து, இந்தப் புலியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisment
பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து புலியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து, ட்ரோன் கேமரா வழியாக கண்காணிக்கப்பட்டது. எனினும் புலியை பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், கடந்த மூன்று நாள்களாக வனப்பகுதியில் முதுமலை காப்பகத்தில் பயிற்சி பெற்ற பழங்குடியினரும்,மருத்துவ குழுவினரும் என 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பத்து காணி பகுதியில் கூண்டில் புலி சிக்கியது. இது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“