/tamil-ie/media/media_files/uploads/2022/12/GP-Muthu.jpg)
அஜித் குமாரின் வலிமை படத்தில் கூட ஒரு சிறிய காட்சியில் ஜி.பி. முத்து வந்துபோவார்.
GP Muthu has bought a luxury car: நடிகரும் சமூக வலைதள பிரபலமுமான ஜி.பி. முத்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகின.
இது குறித்து ஜிபி முத்து இன்ஸ்டாகிராமில், “மாற்றமே வாழ்க்கை, எனது கடின உழைப்பை என் தந்தை, மனைவி, குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எனினும் காரின் விலை உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நடிகர் ஜிபி முத்து ஆரம்ப காலங்களில் டிக்டாக் சமூக வலைதளம் மூலம் பிரபலமானார். அக்காலக்கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அப்போது நாட்டின் பிரதமருக்கு கோரிக்கை வைத்த ஜி.பி. முத்து மற்ற செயலிகள் டிக்டாக் போல் இல்லை. எனவே மோடி ஐயா டிக் டாக் செயலியை மட்டும் திரும்ப கொடுங்கள் என கெஞ்சினார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. அஜித் குமாரின் வலிமை படத்தில் கூட ஒரு சிறிய காட்சியில் ஜி.பி. முத்து வந்துபோவார்.
முன்னதாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நாள்கள் இருந்தார். அந்நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.