/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project100.jpg)
Tik Tok fame surya devi arrested
திருச்சி மாவட்டம், மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி. இவர் மனைவி சூர்யா தேவி (28). இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமானவர்.
திரைப் பிரபலங்கள், சமூக வலைத்தளப் பிரபலங்கங்களை கடுமையாகவும், தவறாகவும் விமர்சனம் செய்து டிக்டாக், யூடியூப்பில் பதிவிட்டு வந்தார். இவரின் செயல்களை இணைய வாசிகள் வசைபாடினர். மற்றொரு டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுடன் சண்டை போட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை தனது தம்பி தேவா மற்றும் கணவர் மருதுபாண்டி ஆகியோர் தன்னை தலையில் அடித்து காயப்படுத்தியதாக மணப்பாறை காவல் நிலையத்தில் சூர்யா தேவி புகார் அளித்தார்.
புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இருத்தரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் காவல் நிலையம் வந்த சூர்யா தேவி, போலீசாரை ஒருமையில் திட்டி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும், மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து தன் மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக் கொள்வதாக போலீஸாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் இருந்த தலைமை காவலர் லாரன்ஸ் சூர்யா தேவி மீது புகார் அளித்தார். காவல்துறையினரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சூர்யா தேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.