சீமானுக்கு டிக்டாக் வீடியோ மூலம் மிரட்டல் – 5 இளைஞர்கள் கைது

Threat to seeman - youths arrested : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டிக் டாக் மூலம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By: Updated: December 26, 2019, 05:51:53 PM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டிக் டாக் மூலம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகியோர் டிக் டாக் மூலம் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

சுமார் 15 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 5 வாலிபர்கள் கையில் கத்தியுடன் கானா பாடல் ஒன்றை பாடுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது. எதுகை மோனையுடன் கூடிய அந்த வீடியோ காட்சியில் சீமானை அவதூறாக பேசி மிரட்டுவது போன்ற வசனங்கள் இருந்தன.

இந்த நிலையில் கடப்பேரியைச் சேர்ந்த 22 வயது மணிகண்டன், 24 வயதான கிஷோர், 21 வயதான நிஷாந்த், 22 வயதான அஜித் மற்றும் 23 வயதான சுரேஷ் ஆகிய ஐந்து இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தியையும் 300 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போதுதான் அதிர்ச்சிகள் காத்திருந்தன.

கஞ்சா போதையில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் பாடலைப் பதிவு செய்து அதை டிக்டாக்கிலும் பதிவேற்றியிருந்தது அம்பலமானது. போலீசார் அவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது , விளையாட்டாகவே அந்த வீடியோக்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tiktok video youths arrested for seeman tik tok video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X