Advertisment

பொது இடத்தில் ஆடை அணிந்தால் அபராதம்: குமரியை அதிர வைத்த அறிவிப்பு

பொது இடத்தில் ஆடை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தை அல்லோலப்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tilparapu waterfall announcement banner goes viral

கன்னியாகுமரி திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு பல மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். இந்த இடத்தில் திற்பரப்பு தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த அறிவிப்பு பலகையில் தமிழில், “பொது வெளியில் ஆடை மற்றினால் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாற்றினால் என்பது மற்றினால் என எழுத்துப் பிழையுடன் காணப்படுகிறது.

அடுத்ததுதான் உச்சப்பட்ச கொடுமை. ஆங்கிலத்தில், “Wearing clothes in public will be fined" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, “பொது இடங்களில் ஆடை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பிழையுடன் காணப்படும் அறிவிப்பு பலகைகளை உடனடியாக மாற்றி புதிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment