திருச்சி-புதுக்கோட்டை 4 வழிச்சாலைக்கு இடம் தர விமான நிலைய ஆணையம் மறுப்பு

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்புக் காரணங்களால் நிலம் தர முடியாது என விமான நிலைய ஆணையம் மறுத்துள்ளது.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்புக் காரணங்களால் நிலம் தர முடியாது என விமான நிலைய ஆணையம் மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
திருச்சி-புதுக்கோட்டை 4 வழிச்சாலை

திருச்சி-புதுக்கோட்டை 4 வழிச்சாலை

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்புக் காரணங்களால் நிலம் தர முடியாது என விமான நிலைய ஆணையம் மறுத்துள்ளது. திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ரூ.67 கோடியில் 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அதில் மாநகரப் பகுதியான டிவிஎஸ் டோல்கேட் முதல் ஊரகப் பகுதியான மாத்தூா் வரை சுமாா் 12 கி. மீ. தொலைவுக்கு இச்சாலையை 4 வழிச்சாலையாகத் தரம் உயா்த்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெறுகின்றன. இந்நிலையில் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக மாநகரப் பகுதிகளில் மட்டும் பணிகள் முற்று பெறவில்லை. குறிப்பாக, கொட்டப்பட்டு மற்றும் விமான நிலையப் பகுதிகளில் மட்டும் பணிகள் தடைபட்டுள்ளன.

Advertisment

விமான நிலைய ஓடுதளத்தின் அருகே (கொட்டப்பட்டு அம்பேத்கா் நகரையும் சோத்து) நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி சுமாா் 5 மீ. அகலத்திலும், சுமாா் 300 மீ. நீளத்திலும் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா். ஆனால் அதற்குரிய இடத்தை விமான நிலைய ஆணையத்திடமிருந்து கையகப்படுத்த இயலாததால் விமான நிலையம் அருகே மட்டும் சாலையை அகலப்படுத்த முடியவில்லை. பிற பகுதிகளில் சாலைகள் 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

 இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் பி. சுப்பிரமணி கூறுகையில், விமான நிலைய ஓடுதளம் அருகே புதுக்கோட்ட சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விமான நிலையத்துக்கு சொந்தமான இடத்தை வழங்குவதில் பல்வேறு இடா்பாடுகள் உள்ளன. குறிப்பாக, பாதுகாப்புக் காரணங்களால் இடம் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும், விமான ஓடுதள நீளம் குறைவாக இருப்பதால், அதை நீட்டிக்கும் முயற்சிகள் நடைபெறும் நிலையில், நிலத்தை வழங்கினால் விமானங்கள் ஏறி இறங்கும்போது ஓடுதளப் பயன்பாட்டுக்கான இடம் ஏற்கெனவே போதாத நிலையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இதுகுறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயா் அலுவலா்கள் விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது சாலைப் பணிக்கு இடம் ஒதுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும், விமான நிலையச் சுற்றுச் சுவரையொட்டி தற்போதுள்ள திருச்சி-புதுகை இரு வழிப் பாதையையும் தரைவழி கீழ்பாலமாக (அண்டா் பாஸ்) அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது என்றாா். அதன்படி தற்போதுள்ள சாலையில் சுமாா் 13 முதல் 18 மீட்டா் ஆழத்தில் பள்ளம் தோண்டி சாலை (தரைப்பாலம்) அமைத்தால் போக்குவரத்துக்கும் பாதிப்பில்லை, பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்காது. இந்தப் பரிந்துரையை நெடுஞ்சாலைத்துறையும் ஏற்று கீழ் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தரைவழி பாலப்பணியை விரைந்து செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத்துறைகள் தீவிரம் காட்ட வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளும், சாலை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: