சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ரயில் 40 நிமிடம் முன்கூட்டியே வந்து சேரும் என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனனர்.
தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் (விரைவு ரயில்) (எண்: 16105/16106) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக (அதிவிரைவு ரயிலாக) மாற்றப்படும் நிலையில் இந்த ரயிலின் எண்: 20605/20606 -ஆக மாற்றப்படும்.
இந்த ரயில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து வழக்கமாக புறப்படுகிற நேரமான பிற்பகல் 4.05 மணிக்கு பதிலாக 4.10 மணிக்கு 5 நிமிஷம் தாமதமாக புறப்பட்டு மறுநாள் காலை 6.50-க்கு பதிலாக 6.10 மணிக்கு 40 நிமிடம் முன்கூட்டியே திருச்செந்தூா் சென்றடையும். மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து வழக்கமாக இரவு 8.10 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு 15 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்டு மறுநாள் வழக்கம்போல் காலை 10.25 மணிக்கு எழும்பூா் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"