Advertisment

உயிரிழந்த பாகனின் மனைவிக்கு அரசு வேலை: பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி எம்.பி

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவி ரம்யாவுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tiruchendur temple elephant attack DMK Kanimozhi MP hand over govt job appointment order to caretakers wife Tamil News

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவி ரம்யாவுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.  இந்நிலையில், திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமார் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

Advertisment

மேலும், உயிரிழந்த யானைப்பாகன் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thiruchendur Murugan Kovil Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment