பாராளுமன்றத்தில் அ.தி.மு.க 13 வாக்குகள் அளித்த காரணத்தால், முஸ்லிம் மற்றும் இலங்கை அகதி மக்களுக்கு துரோகம் செய்தது அதிமுக தான் என்று திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூரில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திருப்பாதிரி புலியூர் தேரடி வீதியில் இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு அநீதி என மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பொது கூட்டம் நடைபெற்றது. மாநகர கழக செயலாளர் கே.எஸ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மாநில துணை பொது செயலாளர் திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் மாநகர மேயர் சுந்தரிராஜா மற்றும் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில், திருச்சி சிவா பேசுகையில், "மத்திய அரசு தமிழகத்திற்கு செய்யும் துரோகங்களையும், அ.தி.மு.க பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாக்களித்தை எடுத்து கோரி அ.தி.மு.க-வை முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.