/indian-express-tamil/media/media_files/2025/08/06/try-congress-meeting-2025-08-06-23-25-00.jpg)
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இன்று (06.08.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் தத்தம் பங்குக்கு பிரசாரங்களை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது பிரசார யுக்திகளை தயார் படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் இன்று (06.08.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு :
1.தேசிய, மாநில, மாவட்ட, கோட்ட மற்றும் அணி தலைவர்கள் அடங்கிய சுமார் 95 நிர்வாகிகள், 65 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கபட வேண்டும்.
2.ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை வாக்குச்சாவடி முகவர்களின் கீழ், குறைந்தபட்சம் 20 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படவேண்டும்.
3.வழங்கப்பட்டுள்ள வார்டு கமிட்டி புத்தகத்தில் சேர்க்கப்படும் வாக்குச்சாவடி முகவர்களின் விவரங்களை வாரம் ஒருமுறை (ஞாயிறு கிழமை) தலைமையகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
4.வார்டு தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து பொதுமக்களை அவரவர் வீடுகளில் சந்திக்கவேண்டும்.
5.வார்டு தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து, வாக்காளர்களை நேரில் சந்தித்து, உறுதிசெய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒருமனதாக செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, சக்தி அபியான் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தியாகராஜன், அமைப்புசாரா தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட துணைத்தலைவர்கள் வல்லபாய் பட்டேல், சத்தியநாதன், மாவட்ட பொது செயலாளர் ராஜா, செயலாளர்கள் பாலு, பாலமுருகன், பன்னீர்செல்வம், சேக் தாவூத், உறந்தை செல்வம், அன்பு ஆறுமுகம், கருப்பையா, ராகவேந்திரன், கோட்டத்தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ் அகில், மார்க்கெட் பகதுர்ஷா, வரகனேரி இஸ்மாயில், சுப்ரமணியபுரம் எட்வின் ராஜ், ஏர்போர்ட் கனகராஜ், அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல் ராய், பொன்மலை பாலசுந்தர், உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், பஞ்சப்பூர் மணிவேல், அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், மாணவர் காங்கிரஸ் நரேன், ஆர் டி ஐ பிரிவு கிளமெண்ட், ஊடகபிரிவு செந்தில், எஸ்.சி.பிரிவு கலியபெருமாள், ஓபிசி அணி ரியாஸ், சிறுபான்மையினர் அணி மொய்தீன், விவசாய பிரிவு அண்ணாதுரை, ஆராய்ச்சிபிரிவு பாண்டியன், கலைப்பிரிவு அருள், அமைப்பு சாரா அணி மகேந்திரன், என்.ஜி.ஒ பிரிவு கண்ணன், ஜவகர் பால் மன்ச் எபினேசர், ஐ டி பிரிவு லோகேஸ்வரன், இந்திரா தோழி மாரீஸ்வரி, வார்டுத்தலைவர்கள் விவேக், மணிமொழி, பூபதி, யோகநாதன், சுரேஷ் குமார், ஹூரா, வெங்கடேஸ்வரன், முருகன், முகமத் ஆரிப், கோபாலகிருஷ்ணன், முகமத் ரஃபிக், சரவணன், விஜயலெஷ்மி, அன்னக்கிளி, வரதாச்சாரி, நூர் அஹமது, கிருஷ்ணகுமார், முத்துக்குமரன், அப்துல் மஜித், ஷாஹுல் அமீத், லஷ்மன், ஆபிரகாம், சாஹீர் ஹுசைன், பூபாலன், ரமேஷ், நடராஜன், செபஸ்தியான், நடராஜன், ரவி சுந்தரம், கோகிலா, பாலமுருகன், ஹக்கீம், கண்ணன், இந்திரா, அனந்த பத்பநாதன், பாண்டியன், கெஜலெட்சுமி, சத்தியா, பால்சாமி, ரவிச்சந்திரன், அன்வர் பாஷா, முகமத் பாரூக், ஆசிக் அஹ்மத், பாலமுருகன், பெரியசாமி, பூபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.