திருவெறும்பூர் அருகே காட்டூர் பாலாஜி நகரில் 2022 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் கொடுப்பது சம்பந்தமாக வாட்ஸப்பில் தகவல் போட்ட நபரை வாயில் வெட்டிய 5 பேரில் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளதோடு மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் நெய் குணம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் பிரபு. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு டோக்கன் வழங்குவது சம்பந்தமாக வாட்ஸாப்பில் தகவல் போட்டுள்ளார். இது சம்பந்தமாக காட்டூர் மஞ்சத்திடல் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (மே 30) இரவு காட்டூர் பாப்பா குறிச்சி ரோட்டில் பிரபு பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது கார்த்திக் (30) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து பிரபுவை வழிமறித்து வலது தோள்பட்டை வாய் உள்ளிட்ட பகுதியில் சரமாறியாக வெட்டி விட்டுஅங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அப்பகுதியில் சென்றவர்கள் பிரபு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்சில் பிரபுவை ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததோடு கார்த்திகை கைது செய்து, மேலும், அவரது நண்பர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“