திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சி பெரியார் நகர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்கவும், பூங்காவை பராமரித்து குடியிருப்பு நலச்சங்கத்திடம் ஒப்படைக்கவும், அறிவுரை வழங்கினார்.
மேலும், பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்று தார் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அங்கு நடைபாதையில் இருந்த தரைக்கடைகளை அகற்ற உத்தரவிட்டார். பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் ரூ.51 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”