க.சண்முகவடிவேல்
திருச்சியில் இன்று (ஆகஸ்ட்.6) செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி கீழப்புலிவார் ரோடு இ.பி ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
இதனால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இ.பி ரோடு, மணி மண்டப சாலை, காந்தி மார்கெட், கல் மந்தை, வெள்ளை வெற்றிலைக் காரத் தெரு, ராணித் தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னக் கடைவீதி, பெரிய கடை வீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக் கோட்டை, மேலப் புலிவார்டு ரோடு, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி செயற் பொறியாளர் பொறிஞர். கா.முத்து ராமன் தெரிவித்துள்ளார்.
மின் தடைப் புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்பிகாபுரம் மின் பகிர்மானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மேல அம்பிகாபுரம், எஸ்.ஐ.டி, கல்கண்டார் கோட்டை, மாஜி ராணுவ காலனி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் காலை முதல் மாலை வரை நிறுத்தப்படும் என மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“