/indian-express-tamil/media/media_files/tYb7ZFY9fmwzCFLSfe4M.jpg)
Tiruchy Anna University student suicide
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டி வந்த ஐந்து பேரை புதுக்கோட்டை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 21 வயதான அந்த மாணவர், சனிக்கிழமை இரவு குமாரமங்கலம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு இரவு 11.30 மணியளவில் தகவல் கிடைத்தது. சடலத்தை அடையாளம் கண்ட போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர், பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தனது வீட்டில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். ரயில்வே போலீசார் கைப்பற்றிய அந்தக் கடிதத்தில், சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். ரயில்வே காவல்துறையினரால் முதலில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் புதுக்கோட்டை மாவட்ட மண்டையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மாணவர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் உள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்த அந்த நபர், மாணவரின் நம்பிக்கையைப் பெற்று, சமீபத்தில் சந்தித்தபோது அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு, அவரும் அவரது கூட்டாளிகளும் அந்த மாணவரிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டி, வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான மிரட்டல்களால் மனம் உடைந்த மாணவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.