scorecardresearch

சென்னை தி.நகர் திருப்பதி தெரியுமா? விரைவில் கும்பாபிஷேகம்

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.

சென்னை தி.நகர் திருப்பதி தெரியுமா? விரைவில் கும்பாபிஷேகம்

தமிழ்நாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமானின் தெய்வீகத் தெய்வமான பத்மாவதி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோயில், சென்னை தி.நகரில் வரும் மார்ச் மாதம் மகாகும்பாபிஷேகத்திற்குத் தயாராகி வருகிறது.

தி நகரில் அமைக்கப்படும் புதிய கோயிலுக்கு கொடிமரம் அமைக்கும் பணி, கடந்த வியாழக்கிழமை கோவில் பூசாரிகளால் சம்பிரதாயத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

தென்னிந்திய நடிகை பி காஞ்சனா, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியதைக் கொண்டு கட்டப்பட்ட இந்த புதிய கோயில், டி நகரில் உள்ள ஜிஎன் செட்டி சாலையில் 14880 சதுர அடி நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளர் அஜ் சேகர் ரெட்டி அளித்த நன்கொடையில் சுமார் ரூ.7 கோடி செலவில் கோயில் கட்டுமானப் பணிக்கும், தோராயமாக ரூ.1.1 கோடி செலவில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கும் பிரிக்கப்பட்டு கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tirumala thirupathi devasthanams new temple at tnagar in chennai

Best of Express