சென்னைவாசிகள் கவனத்திற்கு: இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம்; எந்தெந்த சாலைகள் மூடல்?

இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது.

இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
chennai traffic police

சென்னைவாசிகள் கவனத்திற்கு: இன்று திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்; எந்தெந்த சாலைகள் மூடல்?

இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் முழு விவரம் பின்வருமாறு:

Advertisment

ஊர்வலம் கடந்து செல்லும் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள்:

வால்டாக்ஸ் சாலை: திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அவற்றின் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, வால்டாக்ஸ் சாலை மற்றும் பிரகாசம் சாலை போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம்.

யானைக்கவுனி பாலம்: ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம்.

சூளை ரவுண்டானா: ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது, சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.

Advertisment
Advertisements

ராஜா முத்தையா சாலை: ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

சூளை நெடுஞ்சாலை: ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

அவதான பாப்பையா சாலை: ஊர்வலம் அவதான பாப்பையா சாலையில் வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலை: ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாகச் செல்லலாம்.

ஓட்டேரி சந்திப்பு: ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பு: ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது, கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.

காசி விஸ்வநாதர் ஆலயம், கொன்னூர் நெடுஞ்சாலை: ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையும்போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: