நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திங்கள்கிழமை அறிவித்தார். மேலும், விளவங்கோடு தொகுதி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கட்பர்ட் போட்டிய்டுவார் என்று அறிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 மக்களவைத் தொகுதிகளையும் புதுச்சேரியில் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், நெல்லை மயிலாடுதுறை தொகுதிகளைத் தவிர மற்ற 8 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த இரன்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நெல்லை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் என்பவரை அறிவித்தார்.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கட்பர்ட் போட்டியிடுவார் என்று செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
மேலும், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“